போலீஸ் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தபோது எடுத்த படம். 
உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூரில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

பொதுமக்கள் பயமின்றி வாக்களிப்பதற்காக பரமத்திவேலூரில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.

பரமத்திவேலூர்

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குஅமார் டாகூர் உத்தரவின் பேரில் பரமத்தி வேலூர் டி.எஸ்.பி. ராஜா ரணவீரன் தலைமையில் பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிக்கும் பொருட்டு கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பாகவும், நேர்மையாகவும், அமைதியாக நடைபெறவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், வன்முறை நடைபெறாமல் இருக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிக்கும் வகையில் இந்த கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. 

ஊர்வலம் பரமத்தி வேலூர் காவல் நிலையத்தின் முன்பு இருந்து தொடங்கி அண்ணா சாலை, பள்ளி சாலை, பழைய பைபாஸ் சாலை வழியாக சென்று நான்கு ரோட்டில் நிறைவுற்றது. 

ஊர்வலத்தில் பரமத்தி வேலூர் இன்ஸ்பெக்டர் வீரம்மாள், பரமத்தி இன்ஸ்பெக்டர் சுரேஷ், வேலூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மற்றும் போலீ சார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.