பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கூத்தம்பூண்டி, அண்ணாநகரைச் சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 55) டிரைவர். இவர் கண் குறைபாடு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.
எனினும் கண் குறைபாடு சரியாகாததால் மனமுடைந்து விரக்தியில் இருந்தார்.
இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி சுப்ரமணி வீட்டில் தனியாக இருந்த போது விஷத்தை குடித்துவிட்டார்.
உயிருக்கு போராடிய அவரை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிழந்தார். இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.