பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் தொழிலாளர்கள் மற்றும் மக்கள் விரோத கொள்கை களை திரும்பப் பெறக் கோரி மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பரமத்திவேலூர் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கமணி தலைமை வகித்தார். பரமத்தி வட்டக் குழு உறுப்பினர்கள் கருப்பையா மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் விரோத மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை திரும்பப் பெற வேண்டும். வருமானம் ஈட்டாத குடும்பங்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கிட வேண்டும். பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய தொழிற்சங்கங்களை சேர்ந்த 50&க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.