விபத்து கோப்பு படம். 
உள்ளூர் செய்திகள்

அண்ணனுடன் மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர் விபத்தில் பலி

பரமத்திவேலூர் அருகே அண்ணனுடன் மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர் வாகனம் மோதி பலியானார்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள திண்டமங்கலம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன்கள் கார்த்திக்(28) , மோகன்ராஜ் ( 22 ). இவர்கள் இருவரும் ஈரோட்டில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார்சைக்கிளில் ஊருக்கு வந்தனர்.

வேலகவுண்டம்பட்டி அருகே சென்ற போது எதிரே அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் கார்த்திக்கின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளின் பின்னால் இருந்த மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். கார்த்திக் படுகாயம் அடைந்தார்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கார்த்திக்கை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கார்த்திக்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

வேலகவுண்டன்பட்டி  போலீசார் விரைந்து வந்து பலியான மோகன்ராஜ் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT