ஆலோசனை கூட்டம். 
உள்ளூர் செய்திகள்

சூரியஒளி மின் தகடுகள் அமைத்தல்

திருமருகல் அருகே சூரியஒளி மின் தகடுகள் அமைத்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

மாலை மலர்

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை சார்பில் சூரிய ஒளி மின் தகடுகள் அமைத்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.உதவி வேளாண்மை அலுவலர் சிவானந்தம் முன்னிலை வகித்தார். 

திருமருகல் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாசர் வரவேற்றார். 

இதில் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை நாகை மாவட்ட உதவி பொறியாளர் ராஜராஜன் கலந்துகொண்டு இலவச மின் இணைப்பு உள்ள விவசாயிகளுக்கு 60 சதவீத மானியத்தில் சூரிய மின்சக்தி தகடுகள் அமைக்கும் திட்டம் குறித்தும்,வீடுகளுக்கு 40 சதவீத மானியத்தில் சூரிய ஒளி மின் தகடுகள் அமைப்பது பற்றி கூறினார். 

இதில் விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.