கோப்புப்படம். 
உள்ளூர் செய்திகள்

குடிபோதையில் வாலிபரை தாக்கிய தந்தை-மகன் கைது

வேளாங்கண்ணியில் குடிபோதை தகராறில் வாலிரை தாக்கிய தந்தை-மகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

நாகப்பட்டினம்:

நாகை அருகே தெற்கு பொய்கை நல்லூர், வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மோகன் (வயது 40). இவரும் வேளாங்கண்ணி பண்டகசாலை தெருவைச் சேர்ந்த ஆனந்த மாரிமுத்து (36) என்பவரும், வேளாங்கண்ணி பஸ் நிலையம் அருகே அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது மோகன் கூடுதலாக தனக்கு மது பாட்டில் வாங்கிக்கொடு க்குமாறு கூறி ஆனந்த மாரிமுத்துவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அந்த நேரத்தில் அங்கு வந்த ஆனந்தமாரிமுத்துவின் தந்தை மதியழகன் இது குறித்து மோகனை தட்டி கேட்டார். இதில் மோகன் ஆத்திரம் அடைந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இருவரையும் குத்த முயன்றார்.  அப்போது ஆனந்தமாரி முத்து அவரது தந்தை மதியழகன்இணைந்து சவுக்கு கட்டையால் மோகனை தாக்கினர்.

இதில் பலத்த காயமடைந்த அவர் நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது பற்றிய புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் குமரேசன் வழக்குப்பதிவு செய்து ஆனந்த மாரிமுத்து, மதியழகன் ஆகியோரை கைது செய்தார்.