கோவை டிஐஜி விஜயகுமார் உருவ படத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஹர்ஷ் சிங் மரியாதை செலுத்தப்பட்டது. 
உள்ளூர் செய்திகள்

மறைந்த கோவை டிஐஜி விஜயக்குமார் உருவபடத்திற்கு நாகை மாவட்ட போலீசார் மரியாதை

கோவை சரக டிஐஜியும், நாகை மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டுமான விஜயகுமார் நேற்று உயிரிழந்தார்.நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அலுவலகத்தில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

நாகப்பட்டினம்:

கோவை சரக டிஐஜியும், நாகை மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டுமான விஜயகுமார் நேற்று உயிரிழந்தார்.

அவருக்கு நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அலுவலகத்தில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

அவரின் ஆன்மா சாந்தியடைய மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஹர்ஷ்சிங் தலைமையில் போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து டிஜஜி விஜயகுமார் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் விஜயகுமார் திரு உருவ படம் வைக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.