உள்ளூர் செய்திகள்

சிதம்பரம் அருகே திருடிய லாரியை நிறுத்தி சென்ற மர்ம நபர்கள்

எரிபொருள் தீர்ந்ததால் சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர். போலீசாருக்கு தகவல் கொடுக்க ப்பட்டது.

மாலை மலர்

கடலூர்:

சிதம்பரம் அருகே சீர்காழி செல்லும் புறவழிச் சாலையில் கூத்தன் கோவில் அருகே சென்னை அம்பத்தூர் பகுதியில் திருடப்பட்ட கனரக லாரி மர்ம நபர்கள் எரிபொருள் தீர்ந்ததால் சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர். லாரியில் பொருத்தப்ப ட்டுள்ள ஜி.பி.எஸ். கருவி மூலம் லாரி யின் உரிமையாளர் தொடர்ந்து லாரியை பின் தொடர்ந்து வந்த போது மேற்கண்ட இடத்தில் லாரி நிறுத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் சிதம்பரம் போலீசா ருக்கு தகவல் கொடுக்க ப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.