உள்ளூர் செய்திகள்

மாயமான சமையல்காரர் மர்மச்சாவு

சமையல் மாஸ்டர் ராஜேந்திரனை காணவில்லை என தேடிய நிலையில் மரத்தில் பிணமாக தொங்கினார் அமர்ந்தநிலையில் இறந்ததால் கொலையா? தற்கொலையா? என போலீசார் சந்தேகிக்கிறார்கள்

சூலூர்,

சிவகங்கை மாவட்டம் சூரானம் ஏரிவயல் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 37). இவர் காங்கேயம்பாளையத்தில் உள்ள டாஸ்மார்க் மது பாரில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் பாரில் ரகளை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை காலை சமையல் மாஸ்டர் ராஜேந்திரனை காணவில்லை என தேடி உள்ளனர். அப்போது டாஸ்மாக்கில் இருந்து சுமார் 100 அடி தூரத்தில் உள்ள ஒரு மரத்தின் கிளையில் ராஜேந்திரன் பிணமாக தொங்கினார். அவரது உடல் மண்டியிட்ட நிலையில் நைலான் கயிற்றில் தொங்கிக் கொண்டு இருந்தது.

சூலூர் போலீசாருக்கு அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். சூலூர் போலீசார் ராஜேந்திரன் உடலை விசாரணை நடத்தி வருகிறார்கள். ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜேந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ராஜேந்திரன் உடல் தரையில் முட்டி போட்டு அமர்ந்தநிலையில் இருப்பதால் அது தற்கொலையாக இருக்க முடியாது எனவும், கொலையாக இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது.