சப்பர வீதி உலா நடைபெற்றபோது எடுத்த படம். 
உள்ளூர் செய்திகள்

மாசிமகத்தை முன்னிட்டு முத்துக்குமாரசுவாமி சப்பரத்தில் வீதி உலா

ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வீதி உலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மாலை மலர்

சிவகிரி:

சிவகிரி ஜமீனுக்குப் பாத்தியப்பட்ட கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு மூலவர் ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், நெய், சந்தனம், பன்னீர், குங்குமம், விபூதி, இளநீர் உள்பட நறுமண பொருட்களால் அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர், முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மாலையில் முத்துக்குமாரசுவாமி சப்பரத்தில் அலங்கரித்து முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் ராஜா குடும்பத்தினர் செய்திருந்தனர்.