தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட வடபத்திரகாளி அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது.
அம்மன் நகர்வலம்
விழாவை முன்னிட்டு நேற்று இரவுஅம்பாளுக்கு விசேஷ தீபாராதனைக்கு பின் இரவு 12.05 மணிக்கு நையாண்டி மேளம், தம்பாமேளம், செண்டா மேளத்துடன் வாணவேடிக்கையுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்பாள் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு பொங்லிடுதல், பகல் 12 மணிக்கு மஞ்சள் நீராடுதலுடன் விசேஷ பூஜை, பகல் 1 மணிக்கு முளைப்பாரி கரைத்தலுடன் கொடை விழா நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றது.
விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சேகர் என்ற சந்திரசேகர் மற்றும் சமுதாய கமிட்டி தலைவர் தங்ககுட்டி நாடார் உட்பட விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தமிழ்நாடு துணைத் தலைவர் வக்கீல் சொக்கலிங்கம், முள்ளக்காடு ஊராட்சிமன்ற தலைவர் கோபிநாத் நிர்மல், மாவட்ட கவுன்சிலர் வக்கீல் செல்வகுமார், பொன் முகிலன், பொன்மாடசாமி பிரதர்ஸ், ஆறுமுகம் ஜுவல்லர்ஸ் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் பலவேச கார்த்திகேயன், உப்பு உற்பத்தியாளர்கள் எல்.ஆர்.சிவாகர், ஞானவேலன், முகேஷ் சண்முகவேல், அழகேசன் நாடார், தங்கராஜ் நாடார், அருணாச்சல பாண்டியன், பொன்ராம், திவான் ராஜசேகர், தூத்துக்குடி ஒன்றிய பா.ஜ.க. பொதுச்செயலாளர் பிரபாகர், தூத்துக்குடி பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் எஸ்.எம். சகாயராஜ், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் எஸ்.எம்.ஸ்டாலின், ஸ்ரீ சண்முகா காண்ட்ராக்டர் அழகேசன், விஜய் கேபிள் பொன்ராஜ், முத்துவிஜய், முல்லை லதாசவுண்ட்ஸ் முத்துக்குமார், முள்ளக்காடு வியாபாரி சங்க செயலாளர் முத்துராஜ், தலைவர் முனிய கங்கநாடர், அருண் பழமுதிர்ச்சோலை சுந்தர்ராஜ் நாடார், அருண், விஜயா மெடிக்கல் ஜெயபாண்டி நாடார், செந்தில்குமார், முள்ளக்காடு தி.மு.க. நிர்வாகி சில்வர் சிவா, பி.பி.ஜி.சவுண்ட்ஸ் உரிமையாளர் ஈசாக், பாவா ஹோட்டல் உரிமையாளர் செல்வகுமார், பிரம்மசக்தி சால்ட் நடராஜன், பிரம்மசக்தி ஸ்டோர்ஸ் ராமஜெயம், சக்தி டெக்ஸ்டைல் சரவணன், முருகேசன் நாடார் சன்ஸ் சுந்தரம் சுப்பிரமணியன் நடராஜன் மற்றும் முல்லை அஜித் குருப்ஸ் சோலைகுமார், பாலாஜி, பிரேம், முத்துச்செல்வன், சரவணன், தனசேகர், எஸ்.ஆர். சண்முகநாதன் உட்பட ஊர் பொதுமக்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.