உள்ளூர் செய்திகள்

தாய் காணவில்லை-மகன் போலீசில் புகார்

மணிகண்டன் (வயது 28) இவர் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். எனது தாய் ராணி (48) மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் மணிகண்டன் (வயது 28) இவர் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது, நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற எனது தாய் ராணி (48) மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே எனது தாயை கண்டுபிடித்து தருமாறு மனுவில் கூறியுள்ளார். இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT