உள்ளூர் செய்திகள்

மருமகளை தற்கொலைக்கு தூண்டிய மாமியார் கைது

சேலத்தில் கடந்த 16-ந் தேதி இளம்பெண் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இளம்பெண்ணின் தற்கொலைக்கு தூண்டிய மாமியார் கைது செய்யப்பட்டார்.

சேலம்:

சேலம் கிச்சிப்பாளையம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமர்.

இவரது மனைவி கவிதா (வயது 25). இவர் கடந்த ஏப்ரல் மாதம் 16-ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை அதிகாரி உதவி கமிஷனர் அசோகன் தொடர்ந்து உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.

அதில், கவிதா தற்கொலைக்கு அவரது மாமியார் கல்யாணி (52), தொந்தரவு செய்ததே காரணம் என தெரியவந்தது. இதனால் கல்யாணியை நேற்று போலீசார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT