கொசு மருந்து தெளிக்கும் பணி நடந்தது. 
உள்ளூர் செய்திகள்

வீடுகளில் கொசு மருந்து தெளிக்கும் பணி

வெள்ளப்பள்ளம் ஊராட்சியில் கொசுபுழு ஒழிப்பு நிகழ்ச்சி.சுகாதார துறையினர் வீடு வீடாக சென்று கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் ஊராட்சியில் கொசுபுழு ஒழிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், ஊராட்சி துணை தலைவர் வெற்றிவேல், ஊராட்சி செயலர் ரெங்கராசு, டாக்டர் ஆனந்தன் சுகதார ஆய்வாளர் அருளானந்தம், ஒன்றிய கவுன்சியர் கஸ்தூரி குஞ்சையன் உள்ளிட்ட சுகாதார துறையினர் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.