உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே மொபட் திருட்டு

சம்பவத்தன்று மணி பத்மநேரியில் உள்ள தனது வயலுக்கு மொபட்டில் சென்றார். வயல் அருகே மொபட்டை நிறுத்தி விட்டு, வயலுக்கு சென்று பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சினார்.

மாலை மலர்

களக்காடு:

களக்காடு அருகே உள்ள நெடுவிளை வடக்குத் தெருவை சேர்ந்தவர் மணி (வயது70). விவசாயி. சம்பவத்தன்று இவர் பத்மநேரியில் உள்ள தனது வயலுக்கு மொபட்டில் சென்றார். வயல் அருகே மொபட்டை நிறுத்தி விட்டு, வயலுக்கு சென்று பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சினார்.

பின்னர் திரும்பி வந்து பார்த்த போது மொபட்டை காணவில்லை. மர்ம நபர்கள் மொபட்டை திருடி சென்று விட்டனர். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பபேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மொபட்டை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.