உள்ளூர் செய்திகள்

நாங்குநேரி அருகே கல்லூரி மாணவி மாயம்

ராஜகோபால் அதிகாலை 5 மணிக்கு மாணவியை பானாங்குளம் பஸ் நிறுத்தத்தில் இருந்து வள்ளியூர் செல்லும் பஸ்சில் ஏற்றி அனுப்பி உள்ளார். அதன்பின் மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் பதறிய ராஜகோபால் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

களக்காடு:

நாங்குநேரி அருகே உள்ள முதலைகுளம், நடுத் தெருவை சேர்ந்தவர் ராஜ கோபால். இவரது மகள் வள்ளியூர் அருகே உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 18-ந்தேதி கல்லூரியில் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள அழைப்ப தாக கூறியுள்ளார். இதை யடுத்து ராஜகோபால் அதி காலை 5 மணிக்கு மாணவியை பானாங்குளம் பஸ் நிறுத்தத்தில் இருந்து வள்ளியூர் செல்லும் பஸ்சில் ஏற்றி அனுப்பி உள்ளார்.

அதன்பின் மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் பதறிய ராஜகோபால் பல்வேறு இடங்களில் தேடி யும் மாணவி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதனை தொடர்ந்து அவர் இது குறித்து மூன்ற டைப்பு போலீ சில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT