அரசு பேருந்துகள், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் 
உள்ளூர் செய்திகள்

பொது போக்குவரத்தைப் அனைவரும் பயன்படுத்த வேண்டும்- அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் வலியுறுத்தல்

எரிபொருள் சிக்கனத்தைப் பின்பற்றிய சிறந்த மாநில போக்குவரத்து பணிமனைகளுக்கு விருதுகளை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் வழங்கினார்.

சென்னை:

சென்னையில் நேற்று நடைபெற்ற எரிபொருள் சிக்கன விழிப்புணர்வு நிகழ்ச்சி நிறைவு விழாவில் பங்கேற்ற மாநில போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர், எரிபொருள் சிக்கனம் என்ற கருப்பொருளில் எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பெட்ரோலிய சேமிப்பு மற்றும் ஆய்வு அமைப்பு நடத்திய பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். 

சாதனை மைலேஜூடன் எரிபொருள் சிக்கனத்தைப் பின்பற்றிய சிறந்த மாநில போக்குவரத்து பணிமனைகளுக்கு விருதுகளையும் ரொக்கப் பரிசுகளையும் அவர் வழங்கினார். 

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், எண்ணெய் என்பது நேரத்தைப் போன்றது என்றும், ஒரு முறை பயன்படுத்திய பின் அது திரும்பவும் கிடைக்காது என்றும் கூறினார். 

சீரான ஆற்றல் மிக்க வருங்காலத்தைப் பெற இந்த எண்ணத்தை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அனைவரும் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 

SCROLL FOR NEXT