அமைச்சர் பெரியசாமி 
உள்ளூர் செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் பெரியசாமி

துணை கிராமங்களில் நியாய விலைக்கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை:

தமிழக சட்டசபையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது, துணை கிராமங்களில் நியாயவிலை கடைகள் திறக்க அரசு முன்வருமா? என்று துணை சபாநாயகர் பிச்சாண்டி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, மக்களுக்காகவே திமுக அரசு செயல்பட்டு வருகிறது, நிதி நெருக்கடி இருப்பினும் தேவைப்படும் இடங்களில் மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் நியாயவிலைக் கடைகள் திறக்கப்படும், எனக் கூறினார்.

‘ஒரு கிராமத்தில் 150 ரேஷன் கார்டுகளுக்கு மேல் இருந்தால் பகுதி நேர கடையும், 500 ரேஷன் கார்டுகளுக்கு மேல் இருந்தால் முழு நேர கடைகளும் திறக்க நடவடிக்கை எடுக்கலாம். மேலும், உறுப்பினர் கூறியதுபோன்று கோரிக்கை வரும்பட்சத்தில், துணை கிராமங்களிலும் நியாயவிலைக் கடைகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என அமைச்சர் தெரிவித்தார்.