ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு சொந்தமான காப்பிலியபட்டியில் செயல்பட்டு வரும் உரக்கிடங்கில் மறுசுழற்சி செய்யப்படும் உலர்க ழிவுகளை தரம்பிரிக்கும் பணிகளை அமைச்சர் அர.சக்கரபாணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உரக்கிடங்கு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். மேலும் ஒட்டன்சத்திரம் காந்திமார்க்கெட்டில் கட்டப்பட்டு வரும் புதிய கடைகள், குழந்தைவேலப்பர் கோவில் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கிரிவலப்பாதை, மின் மயானம் உள்ளிட்டவைகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.
இதில் வேலுச்சாமி எம்.பி., மதுரை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் முஜிபூர்ரகுமான், நகர செயலாளர் வெள்ளைச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, நகர்மன்ற தலைவர் திருமலைசாமி, ஆணையாளர் கணேஷ், இளநிலை உதவியாளர் ஈஸ்வரன், பொதுப்பணி மேற்பார்வையாளர் ராம்ஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.