கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

இத்தாலி வர்த்தகர்களுடன் சந்திப்பு - திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு

வருகிற செப்டம்பர் 8, 9-ந் தேதிகளில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.முதல் 10 ஏற்றுமதியாளருக்கு, கட்டணத்தில் 10 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்,

அதிக வாய்ப்புகள் நிறைந்த இத்தாலிய சந்தையை வசப்படுத்துவதற்காக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்( ஏ.இ.பி.சி.,) தொடர் முயற்சி மேற்கொண்டுவருகிறது. இத்தாலி நாட்டின் மிலன் நகரில் வர்த்தகர் - ஏற்றுமதியாளர் சந்திப்புக்கு ஏ.இ.பி.சி., ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி வருகிற செப்டம்பர் 8, 9-ந் தேதிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இத்தாலி நாட்டு வர்த்தகர்கள் பங்கேற்று ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் வழங்குவதற்கான வர்த்தக விசாரணைகள் நடத்த உள்ளனர். இதில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க ஏ.இ.பி.சி., அழைப்பு விடுத்துள்ளது. வரும் 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கும் முதல் 10 ஏற்றுமதியாளருக்கு, கட்டணத்தில் 10 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 0421 2232634, 99441 81001 என்கிற எண்களில் ஏ.இ.பி.சி., அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT