கடலில் விட்டப்பட்ட ஆலிவர் ரெட்லி ஆமைக் குஞ்சுகள். 
உள்ளூர் செய்திகள்

கடலில் விடப்பட்ட ஆலிவர் ரெட்லி ஆமைக் குஞ்சுகள்

கொள்ளிடம் அருகே ஆலிவர் ரெட்லி ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

மாலை மலர்

கொள்ளிடம் அருகே கூழையார் கிராமத்தில் வனத்துறையின்

சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆமைக் குஞ்சுகள் பொறிப்பகம்

செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாகை மாவட்ட வன உயிரின காப்பாளர்

யோகேஷ்குமார்மீனா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட

போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் ஆகியோர் முன்னிலையில்

கடலில் ஆமை குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் இவ்வாண்டு கூழையார் கடல் பகுதியில் ஆமைகள் இட்ட

சுமார் 32,000 முட்டைகள்  பராமரிக்கப்பட்டு வந்தது. குஞ்சுகளும் முட்டையிலிருந்து பொறித்து வெளிவந்தது. இந்நிலையில்

நேற்று 4000-க்கும் மேற்பட்ட ஆலிவர் ரெட்லி ஆமைக்

குஞ்சுகளை கடலில் விட்டனர்.

கடலில் விட்ட நாளிலிருந்து  8 ஆண்டுகள் கழித்து மீண்டும் குஞ்சி பொறிக்கப்பட்ட இடத்திற்கே இனப்பெருக்கத்திற்காக ஆமைகள்

வரும் என்று வன உயிரின காப்பாளர் யோகேஷ்குமார் மீனா

தெரிவித்தார்.

உடன் சீர்காழி வனசரக அலுவலர் ஜோசப் டேனியல், புதுப்பட்டினம் இன்ஸ்பெக்டர் சந்திரா, ஒன்றிய குழு உறுப்பினர் அங்குதன் மற்றும் வனத்துறையினர், காவல்துறையினர் மற்றும் மீனவர்கள்

கலந்து கொண்டனர்.