வைத்தீஸ்வரன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள். 
உள்ளூர் செய்திகள்

வைத்தீஸ்வரன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்

சித்திரை மாதம் 2-வது செவ்வாய்க்கிழமையையொட்டி வைத்தீஸ்வரன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்று பக்தர்கள் வழிபட்டனர்.

மாலை மலர்

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பழமையும் புகழும் வாய்ந்த தையல்நாயகி உடனாகிய வைத்தியநாதசுவாமி கோவில்

உள்ளது. நவக்கிரக தலங்களில் செவ்வாய்க்கு உரிய இக்கோ-விலில் காரைக்-குடி, தஞ்சாவூர் பட்டுக்கோட்டை, புதுக் கோட்டை, மானாமதுரை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச்

சேர்ந்த நகரத்தார் சமூகத்தினரின் குலதெய்வக் கோவி-லாகவும் விளங்கி வருகிறது. நகரத்தார் சமுகத்தினர் ஆண்டு தோறும் சித்திரை மாதம் 2 -வது செவ்வாய்க்-கிழமை வைத்தீஸ்வரன் கோவிலுக்கு

வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வகையில் இரண்டாவது செவ்வாய்க்-கிழமை-யான இன்று நகரத்தார் சமூகத்தினர் வழிபாடு செய்வதற்காக தங்கள் ஊர்களிலிருந்து மஞ்சள் தடவிய

வேப்பிலை செருகிய குச்சியினை கையில் ஏந்தி பாதயாத்திரையாக புறப்பட்டு பலநூறு கிலோமீட்டர் நடைபயணமாக வந்து கோவிலை வந்தடைந்தது வருகின்றனர். 

இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதல் மயிலாடுதுறை வழியாக பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சென்று வருகின்றனர். 

வழிநெடுகிலும் பக்தர்களுக்கு செல்வந்தர்கள் மற்றும் மக்கள் நலன் விரும்-பிகள் நீர்மோர் அளித்தும், அன்ன-தானம் அளித்தும் உதவினர்.