கோவை,
கோவை நெகமம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 34). கூலி தொழிலாளி. இவரது மனைவி சத்யா (28). இவர்களது மகள் ஷாதனய் (2). சம்பவத்தன்று சத்யா தனது மகளை அழைத்து கொண்டு மார்க்கெட்டுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றார்.
ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகேசன் அவர்களை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தார். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.
இதையடுத்து முருகேசன் நெகமம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தாய் -மகளை தேடி வருகின்றனர்.