உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் பட்டதாரி பெண் மாயம்

போலீஸ் நிலையத்தில் பெண்ணின் தந்தை சின்னதுரை புகார் கொடுத்தார்.குமரகுரு என்ற வாலிபர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறியுள்ளனர்.

கடலூர்:

பண்ருட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (வயது24) பி.காம் பட்டதாரி. இவர் நேற்று முன்தினம் பிற்பகல்3.30 மணிக்கு பண்ருட்டி பஸ் நிலையம் அருகில் உள்ள கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றார். இரவு வரை வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடி எங்கும் கிடைக்காதால் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் பெண்ணின் தந்தை சின்னதுரை புகார் கொடுத்தார். புகாரில் குமரகுரு (28) என்ற வாலிபர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறியுள்ளனர். இது குறித்துபண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண்ணை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT