உள்ளூர் செய்திகள்

சிறுமிக்கு திருமணம் நடத்தி வைத்த 5 பேர் மீது வழக்குப்பதிவு

10-ம் வகுப்பு படித்து முடித்த மாணவிக்கும் கடந்த ஜூன் மாதம் திருவதிகையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்துள்ளது.ஆய்வாளர் வள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மாலை மலர்

கடலூர்:

பண்ருட்டி அருகே சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலு (25), கூலி தொழிலாளி. இவருக்கும், 10-ம் வகுப்பு படித்து முடித்த மாணவிக்கும் கடந்த ஜூன் மாதம் திருவதிகையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்துள்ளது. இது குறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆய்வாளர் வள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் சிறுமிக்கு திருமணம் நடந்தது உறுதியானது. இதையடுத்து பாலு, அவரது தந்தை பாக்கியநாதன், தாய் மஞ்சுளா, உறவினர்கள் சங்கர், கோதை ஆகியோர் மீது பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.