வாழப்பாடி:
வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரின் மகளான 16 வயது சிறுமி கடந்த மாத இறுதியில் வீட்டில் இருந்து வெளியேறி மாயமானார். இது குறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.
இந்நிலையில், சிறுமிக்கு திருமண ஆசை காட்டி அழைத்துச் சென்ற ஆத்தூர் நாவலூர் பகுதியைச் சேர்ந்த கிர்த்திக் (வயது 23) என்றும் அவர் அந்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது.இதனைடுத்து, அவரை போக்சோ சட்டத்தின் கீழ் வாழப்பாடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.