கோப்பு படம் 
உள்ளூர் செய்திகள்

நிலக்கோட்டையில் பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

நிலக்கோட்டையில் பெண்ணை கல்லால் தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்

மாலை மலர்

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை  அருகே உள்ள மிளகாய் பட்டியை சேர்ந்த சுரேஷ் மனைவி பாண்டிஜோதி (வயது 27). சுரேஷ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இந்நிலையில் சுரேஷ் இறந்த பின்பும் சுரேஷ் வீட்டில் வசித்து வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுரேஷின் தம்பி சரத்குமார் (23). அசிங்கமாக பேசி கல்லால் அடித்து தலையில் காயம் ஏற்படுத்தினார்.  

இதுகுறித்து பாண்டிஜோதி நிலக்கோட்டை போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் தயாநிதியிடம் கொடுத்த புகாரின் பேரில் சரத்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.  பின்னர் கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.