உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவிலில் போலீஸ் ஏட்டு மனைவிக்கு கொலை மிரட்டல்- ஒருவர் கைது

இசக்கி முத்துக்குமார் சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.சங்கரேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்து சோலைவேலை கைது செய்தனர்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் திரு.வி.க. நகரை சேர்ந்தவர் இசக்கி முத்துக்குமார்(வயது 35). இவர் சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சங்கரேஸ்வரி (33).

இந்நிலையில் திரு.வி.க. தெருவை சேர்ந்த சத்தியமூர்த்தி, சோலைவேல், உதயா ஆகிய 3 பேரும் சங்கரேஸ்வரியிடம் உங்கள் கணவர் எங்களை பற்றி போலீஸ் நிலையத்தில் அடிக்கடி தகவல் கொடுத்து வருகிறார் என்று கூறி அசிங்கமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சங்கரேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்து சோலைவேலை கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர். 

SCROLL FOR NEXT