ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பழங்கால சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக மதுரை மண்டல சிலை கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் கூடுதல் கண்காணிப்பாளர் மலைச்சாமி, இன்ஸ் பெக்டர்கள் இளங்கோ, பிரேமா சாந்தகுமாரி, கவிதா, சத்தியபிரபா, சப்&இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அடங்கிய குழு ஆண்டிபட்டி அருகே உள்ள பொன்னம்படுகை கிராமத்துக்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அந்த கிராமத் தைச் சேர்நத தங்கமலை (வயது 52) என்பவர் கருப்பசாமி மற்றும் அய்யப்பன் சுவாமி சிலைகளை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த சிலைகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இவை கோவிலில் இருந்து திருடப்பட்டவையாக இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் தங்கமலையை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சிலை பதுக்கல் விவகாரத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்றும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.