உள்ளூர் செய்திகள்

சேலத்தில் இரும்பு கடையில் பூட்டை உடைத்து திருடியவர் கைது

சேலத்தில் இரும்பு கடையில் பூட்டை உடைத்து பணத்தை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்:

சேலம் கன்னங்குறிச்சி லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 50). இவர் ஏற்காடு மெயின் ரோடு கே.கே.நகர் பகுதியில் இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். 

இந்த நிலையில் சம்பவத்தன்று கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்ற அவர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கல்லா பெட்டியில் இருந்த 8 ஆயிரம் ரூபாய் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வீரப்பன் கன்னங்குறிச்சி போலீசில் புகார் செய்தார். 

போலீசார் வழக்கு பதிவு செய்து கன்னங்குறிச்சி லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த ஷரோன்ரஷீத் (39) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து கடையில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT