நெல்லை:
குற்றாலம் பேரூராட்சி பூங்கா பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது அருகில் விஷ பாட்டிலும் கிடந்தது.
இதையடுத்து அவரது உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.