சேலம்:
நாமக்கல் ரெயில் நிலையத்திற்கும், மோகனூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே நேற்று முன்தினம் சுமார் 50 வயது மதிக்கத் தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில், சேலம் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து அவரை உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோத னைக்காக சேலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.