திருமங்கலம்
மதுரை மாவட்டம் சாப்டூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட வி. ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி மணிமாலா (வயது 28).
இவருக்கு கடந்த சில மாதங்களாக தொடர் வயிற்று வலி இருந்து வந்தது. மருத்துவரிடம் காண்பித்தும் குணமாகவில்லை. இந்த நிலையில் 100 நாள் வேலைக்குச் சென்ற மணிமாலா வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாப்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.