உள்ளூர் செய்திகள்

பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்

வாடிப்பட்டியில் வ.உ.சி. பிறந்தநாளையொட்டி பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், த.மா.கா வட்டாரத்தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாடிப்பட்டி

வாடிப்பட்டி நகர வெள்ளாளர் உறவின்முறை சங்கம் சார்பில் வ.உ.சி. 151-வது பிறந்தநாள் விழாவையொட்டி பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் சென்றனர். யூனியன் ஆபீஸ் பிரிவிலிருந்து புறப்பட்டு காவல் நிலையம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், போஸ்ட் ஆபீஸ், ஆட்டோ நிறுத்தம் வழியாக பஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த வ.உ.சி. சிலை முன்பு முளைப்பாரி வைத்து வழிபாடு செய்தனர்.

சங்க தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். பொறுப்பாளர்கள் பொன்னையா, பாபநாச மாரியப்பன், நாகமுத்து ராஜா, விக்கி ராம்மோகன் முன்னிலை வைத்தனர். செயலாளர் செந்தில் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், துணைத் தலைவர் கார்த்தி, த.மா.கா வட்டாரத் தலைவர் பாலசரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் சந்தனபாண்டி நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT