மதுரையில் அக்னி வெயிலில் சாலையோரம் அமர்ந்து பூவியாபாரம் செய்து வரும் பெண்கள். 
உள்ளூர் செய்திகள்

கத்திரி வெயிலை பொருட்படுத்தாமல் வியாபாரம் செய்யும் பெண்கள்

மதுரையில் கத்திரி வெயிலை பொருட்படுத்தாமல் பெண்கள் வியாபாரம் செய்கிறார்கள்.

மாலை மலர்

மதுரை

இன்றைய காலத்தில் அனைவரும் வேலை பார்த்தால் தான் வாழ முடியும் என்ற நிலைமை உள்ளது. இதனால் பெண்களும் ஆண்களுக்கு நிகராக வேலைக்குச் சென்று வருகின்றனர். 

மதுரை மாநகரில் சாலை ஓரங்களில் நூற்றுக்க ணக்கான பெண்கள் வியாபாரம் செய்து வருகின்றனர். பஸ் நிலையம் மற்றும் கோவிலுக்கு செல்லும் வழிகளிலும் கத்திரி வெயிலை பொருட்ப டுத்தாமல் காலை முதல் மாலை வரை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

சில பெண்கள் பூ வியாபாரம் செய்கின்றனர். அவர்கள் வியாபாரம் இல்லாத நேரத்தில் பூக்களை கட்டிக்கொண்டு இருக்கின்றனர். 5,10 நிமிடங்கள் கூட வெயிலில் நிற்க முடியாமல் தவிக்கும் சூழ்நிலையில், பெண்கள் குடும்பத்தை காப்பாற்றும் நோக்கத்தில்  போராடி வியாபாரம் செய்து வருவது அனைவரது கவனத்தையும் கவர்ந்து வருகிறது.

ஆண்கள் பலர் மது குடித்துவிட்டு குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காத சூழ்நிலையில் சில பெண்கள் தாங்கள் ஈட்டும் வருமானத்தில் குடும்பத்தை காப்பாற்றும் சூழ்நிலை நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.