உள்ளூர் செய்திகள்

இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி

மேலூர் அருகே இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். ஊர்வலமாக எடுத்துச்சென்று பெரிய கண்மாய் அருகே காளையை அடக்கம் செய்தனர்.

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சேக்கிபட்டியில் முத்தாலம்மன் கோவிலுக்கு சொந்தமான கோவில் காளை உள்ளது. இந்த காளை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்பட பல ஊர்களில் நடைபெற்ற பிரபலமான மஞ்சுவிரட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளது. இந்த நிலை உடல்நலக்குறைவு காரணமாக காளை நேற்று இரவு இறந்தது.

இதையடுத்து அந்த காளைக்கு ஜாதி மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று பெரிய கண்மாய் அருகே காளையை அடக்கம் செய்தனர்.

SCROLL FOR NEXT