கணக்கெடுக்கும் பணி 
உள்ளூர் செய்திகள்

வாகன போக்குவரத்து கணக்கெடுக்கும் பணி

வாடிப்பட்டியில் வாகன போக்குவரத்து கணக்கெடுக்கும் பணி நடந்தது.

வாடிப்பட்டி

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை சார்பில் வாடிப்பட்டி உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வந்து செல்லும் வாகனங்களின் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. 

வாடிப்பட்டி பழைய தாலுகா அலுவலகம் எதிரில் வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சாலைப் பணியாளர்கள் கனரக வாகனங்கள் லாரி, வேன், மினி வேன், மற்றும் ஆட்டோ மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை வந்து செல்வதை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கணக்கெடுத்து வருகின்றனர். 

இந்த பணியினை வாடிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராதா முத்துக்குமாரி, உதவி பொறியாளர் வெங்கடேஷ் பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர்.