உள்ளூர் செய்திகள்

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வலியுறுத்தல்

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது விபரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.தொழிலாளர் நலத்துறை வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாலை மலர்

மதுரை

தொழிலாளர் நலத்துறை ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின்படியும், விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி ஆலோசனை படியும் விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களின் உரிமையாளர்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து வெளிமாநில அல்லது புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விபரங்களை Labour.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.இதனை பதிவு செய்வதற்கு ஆதார் கார்டு அவசியம்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் பதிவேற்றம் செய்யும்படி கேட்டுக்கொ ள்ளப்படுகிறது. மேலும் சந்தேகங்களுக்கு தொழிலாளர் உதவி ஆணையர் 04562-252130 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்துள்ளார்.