உள்ளூர் செய்திகள்

அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள்

அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள் மீட்கப்பட்டது.வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

மதுரை

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் 6-வது பிளாட்பாரம் அருகே 70 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் இறந்து கிடந்தார். அவர் கருப்பு, வெள்ளை கோடு போட்ட டி-சர்ட் அணிந்திருந்தார். இதேபோல் மாட்டுத்தாவணி டவுன் பஸ் நிறுத்தம் அருகே 55 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். வெள்ளை சட்டை அணிந்திருந்தார். இவர்களை பற்றி விவரங்கள் எதுவும் தெரியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் மாட்டுத்தாவணி ேபாலீசார் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.