தல்லாகுளத்தில் அழகர்கோவில் ரோடு இருவழிப்பாதையாக மாற்றப்பட்டு பஸ்கள் செல்கின்றன. 
உள்ளூர் செய்திகள்

மதுரை தல்லாகுளத்தில் போக்குவரத்து மாற்றம்

பறக்கும் பாலம் கட்டுமான பணி நடைபெறுவதால் தல்லாகுளத்தில் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்திருக்கிறது.

மாலை மலர்

மதுரை

மதுரையில் பறக்கும் பால கட்டுமான பணிகள் 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. பொதுமக்களின் வசதிக்காக கட்டுமான பாலங்களின் பக்கவாட்டு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

பறக்கும் பாலம் கட்டுமான பணிகள் முடியும் வரை தல்லாகுளம் பகுதியில் உள்ள அழகர் கோவில் சாலை, நவநீதகிருஷ்ணன் கோவில் வீதி சந்திப்பு முதல் அவுட் போஸ்ட் வரையிலான ஒருவழிப்பாதை  இன்று முதல் இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

மதுரை தல்லாகுளம்- கோகலே ரோடு வழியாக அய்யர்பங்களா, -புதுநத்தம் சாலை செல்லும் வாக னங்கள் வழக்கம்போல அதே வழித்தடத்தில் செல்லலாம். பி.டி.ஆர்.சிலை சந்திப்பில் இருந்து பாண்டியன் ஓட்டல் சந்திப்புக்கு செல்ல வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

பி.பி.குளம் சந்திப்பு, வடமலையான் மருத்துவமனை ஆகிய பகுதிகளில் இருந்து கோரிப்பாளையம் செல்லும் வாகனங்கள், பி.டி.ஆர். சிலை வழியாக பாண்டியன் ஓட்டல் செல்ல அனுமதி இல்லை. இந்த வாகனங்கள் எஸ்.பி. பங்களா சந்திப்பு, தாமரைத்தொட்டி சந்திப்பு வழியாக செல்லவேண்டும்.

மதுரையில் இருந்து அழகர்கோவில் மற்றும் மேலூருக்கு சாலை மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களுக்கும்  இனிமேல் விஷால் மால் வழியாக செல்லமுடியாது.

அழகர்கோவில் சாலை பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் கோகலே ரோடு,- நவநீதகிருஷ்ணன் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, தல்லாகுளம் பெருமாள் கோவில் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, அழகர்கோவில் ரோடு, -அம்பேத்கார் சிலை சந்திப்பு வழியாக பாண்டியன் ஓட்டல் சந்திப்பு வந்து, அங்கிருந்து நேராக அழகர்கோவில் சாலைக்கு செல்ல வேண்டும்.

மேலூர் சாலை பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் கோகலே ரோடு, - நவநீதகிருஷ்ணன் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, தல்லாகுளம் பெருமாள் கோவில் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, அழகர்கோவில் ரோடு&அம்பேத்கார் சிலை சந்திப்பு வழியாக பாண்டியன் ஓட்டல் சென்று, அங்கிருந்து வலதுபுறம் திரும்பி யூத் ஹாஸ்டல் வழியாக கக்கன் சிலை வந்து அதன் பிறகு மேலூர், மாட்டுத்தாவணி பகுதிகளுக்கு செல்லவேண்டும்.

அழகர்கோவில் சாலையில் இருந்து தாமரை தொட்டி சந்திப்பை கடந்து தல்லாகுளம் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் பாண்டியன் ஓட்டல் சந்திப்புக்கு வந்து அங்கிருந்து இடதுபுறமாக யூத் ஹாஸ்டல், கக்கன் சிலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி மதுரை மாநகராட்சி சாலை- அவுட் போஸ்ட் சந்திப்பு வழியாக தல்லாகுளம், தமுக்கம் மற்றும் கோரிப்பாளையத்துக்கு செல்லவேண்டும்.

மேலூர் சாலையில் இருந்து அழகர்கோவில் சாலைக்கு இனிமேல் கக்கன் சிலை, யூத் ஹாஸ்டல் வழியாக செல்லமுடியாது. அதற்கு பதிலாக அனைத்து வாகனங்களும் கக்கன் சிலை, மதுரை மாநகராட்சி அலுவலக சாலை வழியாக பெரியார் சிலையின் வலது புறமாக திரும்பி பாரதியார் பூங்கா, பாண்டியன் ஓட்டல் சந்திப்பு வழியாக அழகர்கோவில் சாலை செல்லவேண்டும்.

மேலூர் சாலையில் இருந்து நத்தம் பகுதிக்கு கக்கன் சிலை, யூத் ஹாஸ்டல் வழியாக இனிமேல் செல்லமுடியாது. அதற்கு பதிலாக கக்கன் சிலை, மதுரை மாநகராட்சி அலுவலக சாலை வழியாக பெரியார் சிலையின் வலதுபுறமாக திரும்பி பாரதியார் பூங்கா, பி.டி.ஆர் சிலை சந்திப்பு வழியாக நத்தம் செல்லலாம்.

நத்தம் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் பி.டி.ஆர். சிலை சந்திப்பு வழியாக செல்ல அனுமதி இல்லை. இந்த வாகனங்கள் எஸ்.பி. பங்களா சந்திப்பில் இடதுபுறம் திரும்பி பாரதி உலா ரோடு, தாமரைத் தொட்டி சந்திப்பு வழியாக ரேஸ்கோர்ஸ் சாலை, கக்கன் சிலை சந்திப்புக்கு வந்து கோரிப்பாளையம் மற்றும் மேலூர் செல்லலாம்.

மேற்கண்ட வாகன போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் அனை வரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.