உள்ளூர் செய்திகள்

திருவிளக்கு பூஜை

சோழவந்தான் அருகே திருவிளக்கு பூஜை நடந்தது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர்.

சோழவந்தான்

சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி வைகையாற்று கரையில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர். விழாவில் நேற்று கோவில் பூசாரி ராமசாமி தலைமையில் அம்மனுக்கு 18 வகையான அபிஷேகம், பூஜைகள் நடந்தன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார்.

இரவு 108 திருவிளக்கு பூஜைகள் நடந்தது. இதில் பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் கமிட்டினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT