உள்ளூர் செய்திகள்

தபால்காரர் மயங்கி விழுந்து சாவு

மதுரை அருகே தபால்காரர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

மதுரை

சிம்மக்கல் பேச்சியம்மன் படித்துறையை சேர்ந்தவர் தேவராஜன் (வயது57). இவர் பழைய குயவர்பாளையம் ரோட்டில் உள்ள தபால் அலுவலகத்தில் தபால்காரராக பணியாற்றி வந்தார். இவருக்கு உடல்நல பாதிப்பு இருந்தது. சம்பவத்தன்று பணியில் இருந்த தேவராஜன் திடீரென மயங்கி விழுந்தார். உடனே சக ஊழியர்கள் அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.