கோவில் கும்பாபிசேகம் 
உள்ளூர் செய்திகள்

கோவில் கும்பாபிஷேகம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

மாலை மலர்

அலங்காநல்லூர் 

மதுரை மாவட்டம் அலங் காநல்லூர் அருகே ஆண்டிப் பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் அங்காள ஈஸ்வரி, காட்டு குருநாதன், மாரநாடு கருப்பணசாமி, உள்ளிட்ட 21 இஷ்ட தெய்வங்களுக்கு  கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

3 நாட்கள் நடந்த விழாவில் 4கால சிறப்பு யாக சாலை பூஜை நடைபெற்றது. மங்கல இசை முழங்க கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. 

இதை தொடர்ந்து ராமேஸ்வரம், அழகர்கோவில் உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு புனித நீர் கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் ஜெய ராஜ், நடராஜன், வேல்சாமி, சோமு, செல்வம், ரமேஷ், நாகராஜ், முருகன், ராஜா, அங்காள ஈஸ்வரி கோவில் பூசாரி பாண்டியம்மாள் செல்லையா, மார்நாடு கருப்பசாமி பூசாரி மனோ கரன், கச்சைகட்டி கோவில் வீடு பூசாரி கண்ணன், காவல்காரர்கள் கருப்பு அம்பலம், கஜேந்திரன் அம்பலம், மற்றும் அய்யூர், கச்சைகட்டி கோவில் பங்காளிகள் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.