உள்ளூர் செய்திகள்

புறநகர் வடக்கு மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்

மதுரை புறநகர் வடக்கு மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. திருப்பூர் துரை சாமிக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை

மதுரை புறநகர்வடக்கு மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் மார்நாடு பேசினார்.

இதில் பொருளாளர் துரைசெழியன், துணைசெயலாளர்கள் அழகர்சாமி, அறிவழகன், கருப்பையா, தலைமை செயற்குழு உறுப்பினர் சுந்தர், மாநில இளைஞரணி துணை செயலாளர் பூப்பாண்டி மற்றும் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தலைமைக்கு எதிரான கருத்துக்களை கூறிவரும் அவைதலைவர் திருப்பூர் துரைசாமியை உடனே கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று பொது செயலாளர் வைகோவை கேட்டு கொள்வது, தி.மு.க.வுடன் ம.தி.மு.க.வை இணைக்க அறிக்கை விடுத்து. தொண்டர்க ளிடையே குழப்பம் ஏற்படுத்தும் திருப்பூர் துரை சாமிக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

SCROLL FOR NEXT