உள்ளூர் செய்திகள்

மாநில அளவிலான கூடைப்பந்தாட்டபோட்டி

மாநில அளவிலான கூடைப்பந்தாட்டபோட்டி நடந்தது. சந்தோஷ் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

சோழவந்தான்

சோழவந்தானில் உள்ள அரசு சண்முகனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சோழவந்தான் கூடைப்பந்தாட்ட கழகத்தின் சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான கூடைபந்தாட்ட போட்டி 4 நாட்கள் நடைபெற்றது.

முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் கொரியர் கணேசன் தொடங்கி வைத்தார்.

இதில் தமிழக முழுவதிலும் இருந்து 24 அணிகள் பங்கேற்றன. முதல் பரிசினை சோழவந்தான் அணியும், 2-ம் பரிசினை வத்தலகுண்டு அணியும், 3-வது பரிசினை ஜேப்பியார் சென்னை அணியும், 4-வது பரிசினை ஆர்.சி.பி.சி. மதுரை அணியும் பெற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் ஆகியோர் பரிசு கோப்பையையும் சன்மானமும் வழங்கினர்.

சந்தோஷ் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT