உள்ளூர் செய்திகள்

ஆன்மீக சொற்பொழிவு

சோழவந்தானில் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது.முன்னாள் சேர்மன் முருகேசன் தலைமை தாங்கினார்.

சோழவந்தான்

சோழவந்தான் திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழாவின் 7-ம் நாள் அர்ஜுன் தபசு விழாவை முன்னிட்டு அம்மன் வீதி உலா நடந்தது. விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ராமகிருஷ்ணன் மகாபாரத சொற்பொழிவாற்றினார். பிரஜா பிதா பிரம்மாகுமாரிகள் ஈஸ்வரிய வித்யாலயம் சார்பில் கீதா ஆன்மீக சொற்பொழிவாற்றினார். ஆன்மீக கலை நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு முன்னாள் சேர்மன் முருகேசன் தலைமை தாங்கினார். பரம்பரை அறங்காவலர்கள் அர்ஜுனன், திருப்பதி, ஜவகர்லால், குப்புசாமி முன்னிலை வகித்தனர். ஆதிபெருமாள் வரவேற்றார். முன்னாள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஷ்ணு பிரசாத், முன்னாள் தலைமை ஆசிரியர் ஜெயஸ்ரீ பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.