உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம்

உசிலம்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.இந்த முகாமில் 75 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

உசிலம்பட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த முகாமில் 75 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அதில் 17 பேருக்கு தேசிய அடையாள அட்டை, நலவாரிய பதிவு செய்து பெறப்பட்டது. மேலும் 10 பேருக்கு தனித்துவ அடையாள அட்டைகளுக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் ெரயில்வே, பஸ் பயண சலுகைக்கான மருத்துவ சான்றுகள் வழங்கப்பட்டது.

முகாமில் மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமிநாதன் மாவட்ட, கல்வி அலுவலர் கணேசன், உதவி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கார்மேகம், சரவண முருகன், புள்ளியியல் ஆய்வாளர் பால்சாமி, வட்டார கல்வி அலுவலர்கள் சுப்புராஜ், திலகவதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்த்தி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜெயந்தி, வளமைய சிறப்பு பயிற்றுநர் மகேஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.