ெபாதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள். 
உள்ளூர் செய்திகள்

மத்திய-மாநில அரசுகளின் வரிகளை குறைத்து சினிமா துறையை காப்பாற்ற கோரிக்கை

தியேட்டர்களுக்கான மத்திய-மாநில அரசுகளின் வரிகளை குறைத்து சினிமா துறையை காப்பாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

மதுரை

மதுரை-ராமநாதபுரம் ஒருங்கிணைந்த சினிமா வினியோகஸ்தர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் மதுரை ரத்னா ரெசிடென்சி ஓட்டலில் நடந்தது. புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்பட்டனர். 

ஜி.என். அன்புச்செழியன் கவுரவ தலைவராகவும், அழகர்சாமி தலைவராகவும், பிரபாகரன் உதவி தலைவராகவும், சாகுல் அமீது செயலாளராகவும், தாமஸ் இணைச் செயலாள ராகவும், மாணிக்கம் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

செயற்குழு உறுப்பினர்களாக வெங்கடேசன், குணசேகரன், காளீஸ்வரன், மணி, சரவணராஜா, வீரப்பன், சேகர், செல்வம், ரமேஷ், ஞானதேசிகன் ஆகியோரும் தேர்ந்து எடுக்கப்பட்டனர். 

கூட்டத்தில் நிறைவேற்ற ப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

திரையரங்குகளுக்கு தமிழக அரசால் விதிக்கப்பட்டு இருக்கும் லோக்கல் டாக்ஸ்  8 சதவீதத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அதை போன்று மத்திய அரசால் விதிக்கப்பட்டிருக்கும் ஜி.எஸ்.டி. 18 சதவீத வரியை குறைத்து சினிமா துறையை காப்பாற்ற வேண்டும் என மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கிறோம்.

பெரிய நடிகர், நடிகை களின் சம்பளத்தை குறைத்து திரைப்படத்துறையை காப்பாற்ற வேண்டும்.  திரைப்படத்துறை நல வாரியத்தில் உள்ள மூத்த உறுப்பினர்கள் அனைவருக்கும் முதியோர் நல உதவித்தொகை வழங்குமாறு தமிழக அரசு கேட்டுக் கொள்கிறது.  மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.