உள்ளூர் செய்திகள்

புத்தகத்துடன் ரெயில் பயணம்: புதிய திட்டம் அறிமுகம்

புத்தகத்துடன் ரெயில் பயணத்திற்கான புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தகவலை மதுரை போட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை

மதுரை ரெயில்வே கோட்டத்தில் 'புத்தகத்துடன் ஒரு பயணம்' என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை மதுரை முதுநிலை கோட்ட ரெயில் இயக்க மேலாளர் ராஜேஷ் சந்திரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மகேஷ் கட்கரி, அலுவல் மொழி அதிகாரி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புத்தகத்துடன் ஒரு பயணம்' திட்டத்தின் ஒரு பகுதியாக, மதுரையில் இருந்து இன்று புறப்பட்ட பிகானீர் வாராந்திர விரைவு ரெயில் குளிர்சாதன முதல் வகுப்பு பயணிகளுக்கு 3 தமிழ், 2 ஆங்கிலம், 5 பிற மொழி இதழ்கள் வழங்கப்பட்டன. இந்தத் திட்டத்தின் வெற்றியைப் பொருத்து, அது மற்ற வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் இன்று மதுரை போட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

SCROLL FOR NEXT