மதுரை
தேர்வு எழுதும் மாண வர்களுக்குத் தன்னம்பிக்கை யூட்டும் வகையில் மதுரை ஹலோ எப்.எம். வகுக்கும் “வெற்றிப்பாதை” நிகழ்ச்சி நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவில்வளாகத்தில் நடைபெறுகிறது.
இதில்10,11 மற்றும்12-ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் மா ணவர்கள் பங்கேற்கிறார்கள். இதில் சொல்ல வேண்டிய மந்திரங்கள், மாணவர்களுக்கும், பெற்றோருக்குமான ஆலோசனைகள், கூட்டுப்பிரார்த்தனை இவற்றோடு மனதை ஒரு நிலைப்படுத்த நாட்டியம், பஜனை, நாதஸ்வரம் மற்றும் வீணை இசையும் நடைபெற உள்ளது.
தேர்வெழுதும் மாணவர்கள், பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொள்ளும் வகையில்நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ப்ரிய கலாலயா பிரியதர்ஷினி காளிதாஸ்குழுவினரின் நாட்டியம், திருக்கோவில் ஆஸ்தான நாதஸ்வர கலைஞர் ராமகிருஷ்ணன் வழங்கும் இசை நிகழ்ச்சி, ஆண்டாள் சேவா சங்கம் குழுவினரின் பஜனை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
அதனைத்தொடர்ந்து விதூஷி ஆனந்தி பூரணசந்திரனின் வீணை இசை இடம்பெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக அழகர்கோவில் ஸ்தானிக அர்ச்சகர் அம்பி பட்டர், மதுரை மாவட்ட தலைமைக் கல்வி அதிகாரி சுவாமிநாதன், சுப்புலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி முதல்வர் சுஜாதா, மருத்துவர் நடராஜ பெருமாள், விக்ரம் பொறியியல் கல்லூரி தாளாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
இம்மையிலும் நன்மை தருவார் கோவிலின் ஸ்தல அர்ச்சகர் தர்ம ராஜ் சிவம் பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள் சொல்லவேண்டிய மந்திர ங்களை வழங்க உள்ளார். ஹலோ எப்.எம். ஆத்திசூடி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜெயராம் நடத்தும் கூட்டுப் பிரார்த்தனையும்ந டைபெற உள்ளது.